இவாங்கா பாராட்டுக்கு ப.சிதம்பரம் ட்விட்டரில் கருத்து!
இந்திய அரசு 13 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்து இருப்பதாக இவாங்கா ட்ரம்ப் பாராட்டி பேசியதற்கு, முன்னாள் நிதிஅமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்தில் நேற்று சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்டு பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்ப், இந்திய அரசு 13 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்து இருப்பதாகவும் இது பெருமைக்குரிய செயல் என்றும் பாராட்டி பேசி இருந்தார். இதனை சுட்டிக்காட்டி ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விளைவாக தான் 13 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டதாக கூறியுள்ளார். மேலும், இது 2004 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசின் சாதனை என்றும் ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.