\
எங்கள் ஆதரவு எம்எல்ஏக்கள் ஸ்லீப்பர் செல்களாக உள்ளனர் - டிடிவி தினகரன்

எங்கள் ஆதரவு எம்எல்ஏக்கள் ஸ்லீப்பர் செல்களாக உள்ளனர் - டிடிவி தினகரன்

எங்கள் ஆதரவு எம்எல்ஏக்கள் ஸ்லீப்பர் செல்களாக உள்ளனர் - டிடிவி தினகரன்
Published on

எங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஸ்லீப்பர் செல்களாக உள்ளார்கள் என்றும், தேவைப்படும்போது பலத்தை நிரூபி‌ப்போம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை மற்றும் வேதா இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் என்று நேற்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதைத்தொடர்ந்து அதிமுகவின் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் இணைவது குறித்த பேச்சுவார்த்தைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. தமிழக அமைச்சர்கள் ஓபிஎஸ்-ஐ சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், சசிகலாவை பெங்களூரு சிறையில் சந்தித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஸ்லீப்பர் செல்களாக உள்ளார்கள், தேவைப்படும்போது பலத்தை நிரூபி‌ப்போம் என தினகரன் என்று கூறினார். ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணிகளில் உள்ள தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள், அணிகளை இணைக்க விடாமல் தொடர்ந்து அதற்கு முட்டுக்கட்டை போடுவார்கள் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com