“மேற்குவங்கத்தில் மனித உரிமை மீறல்” - மம்தாவுக்கு பாஜக பதிலடி 

“மேற்குவங்கத்தில் மனித உரிமை மீறல்” - மம்தாவுக்கு பாஜக பதிலடி 
“மேற்குவங்கத்தில் மனித உரிமை மீறல்” - மம்தாவுக்கு பாஜக பதிலடி 

மேற்குவங்கத்தில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக பாஜக விமர்சித்துள்ளது.

உலக மனிதநேய தினத்தை முன்னிட்டு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தன்னுடைய ட்வீட்டரில், “இன்று உலக மனிதநேய தினம். காஷ்மீரில் மனித உரிமைகள் முற்றிலும் மீறப்பட்டுள்ளது. காஷ்மீர் மக்களின் மனித உரிமைக்காக அங்கு அமைதி நிலவவும் பிரார்த்தனை செய்வோம்” எனக் கூறியுள்ளார். 

மேலும், “மனித உரிமைகள் என்பது என்னுடைய இதயத்திற்கு நெருக்கமான ஒன்று. 1995ம் ஆண்டு சிறைக் காவல் மரணங்களுக்கு எதிராக 21 நாட்கள் சாலையில் நடைபயணம் மேற்கொண்டேன்” எனவும் மம்தா தெரிவித்தார்.

காஷ்மீர் குறித்த மம்தாவின் கருத்துக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. மேற்குவங்க பாஜக பொதுச் செயலாளரும் மத்திய இணை அமைச்சருமான தேபஸ்ரீ சவுதுரி கூறுகையில், “மனித உரிமை மீறல்களை பார்க்க ஒருவர் வேறு மாநிலங்களுக்கு செல்ல தேவையில்லை. மேற்குவங்கத்தின் சட்டம்-ஒழுங்கை பாருங்கள். நிர்வாகம் முற்றிலும் நிலைகுலைந்துள்ளது. எங்களின் மற்றொரு சகோதரரை இழந்துள்ளோம். காக்திப் பகுதியில் பாஜக பூத் கமிட்டி செயலாளர் கேதர் மொல்லா திரிணாமூல் கட்சி குண்டர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com