டிரெண்டிங்
எடப்பாடி பழனிசாமி பேனர் கிழிப்பு: ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கைது
எடப்பாடி பழனிசாமி பேனர் கிழிப்பு: ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கைது
புதுக்கோட்டையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கவுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று வைக்கப்பட்ட பேனரை கிழித்ததாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை நகர் முழுவதும் முதலமைச்சர் பழனிசாமிக்கு ஆதரவாக வைக்கப்பட்ட பேனர்களில் சிவற்றை 2 நாட்களுக்கு முன் கிழிக்கப்பட்டதாக அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் செந்தில், புதுக்கோட்டை நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில் அதிமுக வட்டச்செயலாளர்கள் சுமன், பகவதி உட்பட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 4 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதனிடையே அவர்களை விடுவிக்க வலியுறுத்தி காவல்நிலையம் முன் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியிலுள்ள சிலர் வேண்டுமென்றே இந்த புகாரை அளித்துள்ளதாகக் கூறி மறியல் போராட்டமும் நடைபெற்றது.