\
ஆதரவற்ற குழந்தைகளுடன் புத்தாண்டு கொண்டாடிய ஓபிஎஸ்

ஆதரவற்ற குழந்தைகளுடன் புத்தாண்டு கொண்டாடிய ஓபிஎஸ்

ஆதரவற்ற குழந்தைகளுடன் புத்தாண்டு கொண்டாடிய ஓபிஎஸ்
Published on

ஆதரவற்ற குழந்தைகளுடன் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் புத்தாண்டு கொண்டாடியுள்ளார்.

நாடு முழுவதும் புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் புத்தாடைகளை உடுத்தியும், கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். புத்தாண்டையொட்டி கோயில்களில் சிறப்பு பூஜைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான மக்கள் தங்களுக்கு பிடித்த கோயிலுக்கு சென்று சாமி தரிசனமும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆதரவற்ற குழந்தைகளுடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புத்தாண்டு கொண்டாடியுள்ளார். ஆதரவற்ற குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கி அவர்களுடன் மகிழ்ச்சியாக ஓபிஎஸ் தனது புத்தாண்டை கொண்டாடியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களை ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com