தினகரன் ஆதரவு மாவட்ட செயலாளர்களை நீக்க ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் முடிவு

தினகரன் ஆதரவு மாவட்ட செயலாளர்களை நீக்க ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் முடிவு

தினகரன் ஆதரவு மாவட்ட செயலாளர்களை நீக்க ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் முடிவு
Published on

டிடிவி தினகரனுக்கு ஆதரவான மாவட்ட செயலாளர்களை பொறுப்பிலிருந்து நீக்க அதிமுக உயர்மட்டக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வி குறித்து அதிமுக உயர்மட்டக்குழு நிர்வாகிகளுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனை நடத்தினர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட பலர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஏற்பட்ட தோல்வி குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் டிடிவி தினகரனுக்கு ஆதரவான மாவட்ட செயலாளர்களை பொறுப்பிலிருந்து நீக்கவும் முடிவு எடுக்கப்பட்டது. டிடிவி தினகரனுக்கு ஆதரவான தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், ரங்கசாமி, வி.பி.கலைராஜன் உள்ளிட்டோரை அதிமுகவில் இருந்து நீக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com