துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
திங்கட்கிழமை நடைபெறும் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை அழைத்து பேச வேண்டும் என்ற கோரிக்கை ஆகியவை குறித்து அவர் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, வழக்கறிஞர் மனோஜ் பாண்டியன், மைத்ரேயன் எம்.பி. ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.