அதிமுக அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைக் குழு கலைப்பு: ஓ.பி.எஸ்.

அதிமுக அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைக் குழு கலைப்பு: ஓ.பி.எஸ்.
அதிமுக அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைக் குழு கலைப்பு: ஓ.பி.எஸ்.

அதிமுக அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைக் குழு கலைக்கப்படுவதாக முன்னாள் முதல்வரும் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

திருவேற்காட்டில் நடந்த அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஓ.பி.எஸ்., “அதிமுக அணிகள் இணைப்பு தேவை இல்லை என மக்கள் விரும்புகின்றனர். மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப அதிமுக அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைக் குழு கலைக்கப்படுகிறது” என்றார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் 2 அணிகளாக பிளவு ஏற்பட்டது. கட்சியையும், ஆட்சியையும் தொடர்ந்து நடத்துவதற்கு, பிரிந்த அணிகள் மீண்டும் இணைவது அவசியம் என்பதை உணர்ந்து இரு அணிகளையும் இணைக்க இரு தரப்பிலும் பேச்சுவார்த்தைக்குழு அமைக்கப்பட்டது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை, கட்சியில் இருந்து சசிகலா குடும்பத்தினரை முழுவதுமாக நீக்குவது ஆகியவை ஓ.பி.எஸ். தரப்பின் முக்கிய கோரிக்கையாக இருந்தது. இதை நிறைவேற்றினால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அவர்கள் கூறி வந்தனர். இந்நிலையில், பேச்சுவார்த்தைக் குழு கலைக்கப்படுவதாக ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com