\
தஞ்சையில் ஓபிஎஸ் ஆதரவு பேனர்கள் கிழிப்பு

தஞ்சையில் ஓபிஎஸ் ஆதரவு பேனர்கள் கிழிப்பு

தஞ்சையில் ஓபிஎஸ் ஆதரவு பேனர்கள் கிழிப்பு
Published on: 

தஞ்சையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக வைக்கப்பட்ட பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளன.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தஞ்சையில் தனது ஆதரவாளர்களை நாளை சந்திக்கிறார். அப்போது பன்னீர்செல்வம் அணியில் 10,000 பேர் இணையும் நிகழ்ச்சியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி தஞ்சை மாநகராட்சி முழுவதும் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அந்த பேனர்களில் சிலவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் நள்ளிரவில் கிழித்துள்ளனர். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்த பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், மாநாட்டுக்கு வருபவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com