தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தின் புதிய கட்டடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை சேப்பாக்கத்தில் இன்று திறந்து வைத்தார்.
அரும்பாக்கம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் செயல்பட்டு வந்த பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு, சேப்பாக்கம் எழிலக வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதற்கான, புதிய கட்டடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், ரஞ்சன் கோகாய், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி ஆகியோர் திறப்பு விழாவில் பங்கேற்றனர்.