173 வேட்பாளர்களில் 13 பேர் மட்டுமே பெண்கள் - தலைநகரத்தின் களநிலவரம்

173 வேட்பாளர்களில் 13 பேர் மட்டுமே பெண்கள் - தலைநகரத்தின் களநிலவரம்

173 வேட்பாளர்களில் 13 பேர் மட்டுமே பெண்கள் - தலைநகரத்தின் களநிலவரம்
Published on

நாடாளுமன்றத் தேர்தலில் டெல்லியில் போட்டியிடும் 173 வேட்பாளர்களில் வெறும் 13 பேர் மட்டுமே பெண்கள் எனத் தெரியவந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தற்போது வரை 3 கட்டங்களுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. டெல்லியில் இருக்கும் 7 தொகுதிகளுக்கு வரும் மே 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் இம்முறை டெல்லியில் வெறும் 13 பெண் வேட்பாளர்களே களத்தில் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. டெல்லியில் மொத்தம் 7 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இம்முறை இவற்றில் 173 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் வெறும் 13 பேர் மட்டுமே பெண் வேட்பாளர்களாக உள்ளனர். காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் ஷிலா திக்‌ஷித் போட்டியிடுகிறார். அதேபோல் ஆம் ஆத்மி சார்பில் அட்டிசி மர்லேனா களமிறங்குகிறார். பாஜக சார்பில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்றிருந்த மீனாட்சி லெகி களம் காண்கிறார். மீதமுள்ள 10 பெண் வேட்பாளர்கள் சுயேச்சையாக போட்டியிடுகின்றனர்.

கடந்த 2014 தேர்தலில் டெல்லியில் 150 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களில் 13 பெண் வேட்பாளர்கள் இருந்தனர். அதேபோல, 2009 தேர்தலில் 160 பேர் போட்டியிட்டனர். அதில் 18 பெண் வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இந்த இரு தேர்தல்களில் ஒரே ஒரு பெண் வேட்பாளர் மட்டும் வெற்றிப் பெற்றார். டெல்லியில் 1 லட்சத்து 43 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். அதில் 64 லட்சம் பெண் வாக்காளர்களும், 72 லட்சம் ஆண் வாக்காளர்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com