14 ஆண்டுக்கு முன்பு இதே நாளில் தோனி தலைமையில் வெற்றிக் கணக்கை தொடங்கிய சிஎஸ்கே!

14 ஆண்டுக்கு முன்பு இதே நாளில் தோனி தலைமையில் வெற்றிக் கணக்கை தொடங்கிய சிஎஸ்கே!
14 ஆண்டுக்கு முன்பு இதே நாளில் தோனி தலைமையில் வெற்றிக் கணக்கை தொடங்கிய சிஎஸ்கே!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏப்ரல் 19 ஆம் தேதி 2008 ஆம் ஆண்டு தன்னுடைய முதல் ஐபிஎல் போட்டியை கொல்கத்தா அணிக்காக 14 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் விளையாடியது.

சண்டிகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே 5 விக்கெட் இழப்புக்கு 240 ரன்களை குவித்தது. அந்தப் போட்டியில் மைக்கள் ஹசி 54 பந்துகளில் 116 ரன்களை சேர்த்து அசத்தினார். அடுத்து விளையாடிய கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் சேர்த்து தோல்வியடைந்தது. இதனையடுத்து ஐபிஎல் வரலாற்றில் முதல் வெற்றியை பதிவு செய்தது தோனி தலைமையிலான சிஎஸ்கே சிங்கம்.

அதன் பின்பு தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி 2010,2011 மற்றும் 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை அசத்தி சாதனைப்படைத்தது. 14 சீசன்களுக்கும் தோனிதான் சிஎஸ்கேவின் ஆதர்சன கேப்டனாக இருந்து வருகிறார். இந்த ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி தோனிக்கு சிஎஸ்கேவுக்காக விளையாடிய 200 ஆவது போட்டியாகும். சிஎஸ்கே அணியில் எத்தனையோ வீரர்கள் வந்து சென்றாலும் இன்னும் கேப்டனாக இருப்பது தோனி மட்டுமே.

இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. தோனி தலைமையிலான சென்னை அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் தலா இரு போட்டிகளில் விளையாடி தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்துள்ளன.

இவ்விரு அணிகளும் இதுவரை 23 முறை நேருக்கு நேர் களம் கண்டுள்ளன. அவற்றில் சென்னை அணி 14 முறையும், ராஜஸ்தான் அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளும் வெற்றிப் பாதையில் தொடர்ந்து பயணிக்கும் முனைப்பில் இன்றைய போட்டியில் களம் காண்கின்றன. 14 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில் கொல்கத்தாவை சிஎஸ்கே துவம்சம் செய்தது போல இன்றையப் போட்டியிலும் ராஜஸ்தானை துவம்சம் செய்யுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com