இதுதான் மோடி சொன்ன மனதின் குரலா?: பிரகாஷ் ராஜ் கிண்டல்

இதுதான் மோடி சொன்ன மனதின் குரலா?: பிரகாஷ் ராஜ் கிண்டல்
இதுதான் மோடி சொன்ன மனதின் குரலா?: பிரகாஷ் ராஜ் கிண்டல்

எடியூரப்பா குறித்த பாஜக தலைவர் அமித்ஷாவின் பேச்சை நடிகர் பிரகாஷ்ராஜ் கிண்டல் செய்துள்ளார்.

கர்நாடகாவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, “ஊழல் மலிந்த அரசுக்கு போட்டி வைத்தால் அதில் எடியூரப்பா அரசுக்கு தான் முதலிடம் கிடைக்கும்’ என்று கூறினார். சித்தராமையா அரசு என்று சொல்வதற்கு பதிலாக வாய் தவறி எடியூரப்பா அரசு என்று கூறிவிட்டார். அமித்ஷா பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பகிர்ந்து வருகின்றனர். 

பாஜக அரசு மீது பல்வேறு விமர்சனங்களை வெளிப்படையாக வைத்து வரும் நடிகர் பிரகாஷ் ராஜூம் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். “கர்நாடக தேர்தல் அறிவிப்புகள் வெளியாகியிருக்கும் வேளையில் உண்மை கடைசியில் வெளிவந்துவிட்டது. இதுதான் உங்களுடைய மான் கீ பாத்தா(மனதின் குரல்)?” என்று பிரகாஷ்ராஜ் கிண்டல் செய்துள்ளார். 

பிரகாஷ் ராஜ் #justasking என்ற ஹேஷ்டேக் மூலம் பல்வேறு கேள்விகளை, கருத்துக்களை கூறி வருகின்றனர். இதில் பாஜக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com