“பாஜகவிடமிருந்து நாட்டை காப்பற்ற எதையும் செய்வோம்” - கெஜ்ரிவால்

“பாஜகவிடமிருந்து நாட்டை காப்பற்ற எதையும் செய்வோம்” - கெஜ்ரிவால்
“பாஜகவிடமிருந்து நாட்டை காப்பற்ற எதையும் செய்வோம்” - கெஜ்ரிவால்

பாஜகவிடமிருந்து நாட்டை காப்பற்றுவதற்கு என்னவேண்டுமானலும் செய்வோம் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. முதற்கட்ட தேர்தல் கடந்த 11ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இந்தத் தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் சில இடங்களில் சரியாக செயல்படவில்லை எனப் புகார்கள் எழுந்தன. இதுகுறித்து ஆலோசிக்க இன்று டெல்லியில் எதிர்க்கட்சிகள்  கூட்டம் நடந்தது.


 
இதனைத் தொடர்ந்து டெல்லியில் இன்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “இந்திய நாடு தற்போது ஆபத்தான நிலையில் உள்ளது. அதனால் இந்திய நாட்டை பாஜகவிடம் இருந்து காப்பாற்ற ஆம் ஆத்மி கட்சி என்ன வேண்டுமானாலும் செய்யும்” எனத் தெரிவித்தார்.

இந்தச் செய்தியாளர் சந்திப்பில் கெஜ்ரிவாலுடன் காங்கிரஸ் தலைவர்கள் கபில் சிபல் மற்றும் அபிஷேக் சிங்க்வி ஆகியோர் உடனிருந்தனர். டெல்லியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே கூட்டணி குறித்து அவர்களிடம் கேட்கப்பட்டது. அப்போது கபில் சிபல், “கூட்டணி குறித்து கெஜ்ரிவாலிடம்தான் கேட்க வேண்டும்” எனத் தெரிவித்தார். அபிஷேக் சிங்க்வி, “டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் நிலை குறித்து அனைவரும் அறிவர். டெல்லியில் கூட்டணி உறுதியான நிலை ஏற்பட்டிருந்தது. எனினும் அதை மற்ற மாநிலங்களுடன் சேர்த்து பார்த்தப் போது கூட்டணி சரியாக இல்லை” எனக் கூறினார்.

முன்னதாக டெல்லியில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணியில் இழுபறி நீடித்துவந்தது. இதனையடுத்து டெல்லிக்கான காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் பி.சி. சாக்கோ டெல்லியில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடவுள்ளது என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com