தேர்தலில் போலி சாதிச் சான்றிதழ்: காங்கிரஸ் எம்.எல்.ஏ பதவி பறிப்பு
ஒடிசா மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜோகேஷ்குமார் சிங்கின் பதவியை ரத்து செய்து அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2014-ம் ஆண்டு நடைபெற்ற சட்டம்ன்ற தேர்தலில் ஜோகேஷ்குமார் சிங் போலி சாதிச் சான்றிதழ் சமர்பித்ததாக அவர் மீது புகார் எழுந்தது. தேர்தலில் அவரிடம் தோல்வி அடைந்த பாஜக வேட்பாளர் ஸாஸா, மற்றும் வாக்காளர் என்ற அடிப்படையில் அஜய் படேல் என்பவர் ஜோகேஷ்குமார் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பழங்குடினர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று போலீயான சாதிச் சான்றிதழ் வழங்கினார் என்பதே குற்றச்சாட்டு.
இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில், ஜோகேஷ்குமார் சிங் கண்டாயத் பூயன் வகுப்பைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இது தாழ்த்தப்பட்டோர் வகுப்பில் வராது. இந்நிலையில், போலியான சாதிச் சான்றிதழ் வழங்கிய குற்றச்சாட்டு நிரூபணமானதால், காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜோகேஷ்குமார் பதவியை ஒடிசா உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.