தோல்விக்குப் பொறுப்பேற்று ஒடிஷா காங்கிரஸ் தலைவரும் ராஜினாமா!

தோல்விக்குப் பொறுப்பேற்று ஒடிஷா காங்கிரஸ் தலைவரும் ராஜினாமா!
தோல்விக்குப் பொறுப்பேற்று ஒடிஷா காங்கிரஸ் தலைவரும் ராஜினாமா!

ஒடிஷாவில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் நிரஞ்சன் பட்நாயக், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 300 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றியுள்ளது. இதனால் பாஜக, தனிப் பெருபான்மையுடன் ஆட்சியமைக்கிறது. காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியின் கோட்டை எனக் கூறப்பட்ட அமேதி தொகுதியில் பாஜகவின் ஸ்மிருதி ராணி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வீழ்த்தினார். உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது. மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் கிடைத்த படுதோல்விக்கு பொறுப்பேற்று, அம்மாநில காங்கிரஸ் தலைவரும் நடிகருமான ராஜ் பப்பார் ராஜினாமா
செய்துள்ளார்.

அதே போல ஒடிஷா காங்கிரஸ் கட்சித் தலைவர் நிரஞ்சன் பட்நாயக்கும் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, ‘’ஒடிஷாவில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது. தோல்விக் குப் பொறுப்பேற்று நான் எனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அனுப்பிவிட்டேன். இளைஞர்களிடையே கட்சியை வளர்க்க, வலுவான அடிதளத்தை அமைக்க வேண்டியது அவசியம்’’ என்று தெரிவித்துள்ளார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com