கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் ஓடைக்குறிஞ்சி மலர்கள்...!

கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் ஓடைக்குறிஞ்சி மலர்கள்...!
கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் ஓடைக்குறிஞ்சி மலர்கள்...!

ஓடைக்கரையில் வருடம் ஒருமுறை பூக்கும், ஓடைக்குறிஞ்சி மலர்கள் கொடைக்கானல் பூம்பாறை சாலையோர ஓடைகளில் பூக்கத் துவக்கியுள்ளது.


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூம்பாறை நெடுஞ்சாலை ஓரங்களில் இருபுறமும் அமைந்துள்ள ஒடைக்கரைகளில் ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் ஓடைக்குறிஞ்சி மலர்கள் கொத்து கொத்தாக பூத்து குலுங்கத் துவங்கியுள்ளன.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி பூவை விட, அளவில் மிகச்சிறியதாக இருக்கும் இந்த ஓடைக்குறிஞ்சி பூக்கள் பூத்துள்ளதை அறியும் வண்ணம், பூவின் தன்மை, மற்றும் பூவின் அறிவியல் விளக்கங்கள் அடங்கிய தகவல்களை, பூக்கள் பூத்துள்ள பகுதியில் பதாகைகளாக வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


ஆசிய கண்டத்தில் பதி நான்கிற்கும் மேற்பட்ட வகையான குறிஞ்சி மலர்கள் உள்ளன. இந்நிலையில், கொடைக்கானல் மலைப்பகுதியில் 12 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி வகையை அடுத்து, ஓடைக்குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக இயற்கை நேசர்கள் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com