ஓபிஎஸ் கிணறு விவகாரம்: மீண்டும் போராட்டத்தை தொடங்கிய கிராம மக்கள்

ஓபிஎஸ் கிணறு விவகாரம்: மீண்டும் போராட்டத்தை தொடங்கிய கிராம மக்கள்

ஓபிஎஸ் கிணறு விவகாரம்: மீண்டும் போராட்டத்தை தொடங்கிய கிராம மக்கள்
Published on

தேனி மாவட்டம் லட்சுமிபுரத்திலுள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கிணறு விவகாரம் தொடர்பாக கிராம மக்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சொந்தமான தோட்டத்தில் அமைக்கப்பட்ட ராட்சத கிணறால் லட்சுமிபுரத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதாகக் கூறி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். அதனால், கடந்த 13-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. அதில், 90 நாட்களுக்குள் கிராம மக்களே பிரச்னைக்குரிய கிணறையும், அதை சுற்றியுள்ள 6 ஏக்கர் 84 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்குவது என முடிவு செய்யப்பட்டது. ஆனால், பேச்சுவார்த்தைக்கு முந்தைய தினமே சுப்புராஜ் என்பவர் பெயருக்கு கிணறும், நிலமும் மாற்றப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை கண்டித்து கிராம மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓ.பன்னீர்செல்வம் கிணற்றை தானமாகவோ அல்லது தங்கள் கிராமத்திற்கு விற்பனைக்கோ தரும் வரை ஒவ்வொரு நாளும் போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com