டெங்கு ஆட்சியா.... எய்ட்ஸ் ஆட்சியா....மாறி மாறிக் குற்றச்சாட்டு

டெங்கு ஆட்சியா.... எய்ட்ஸ் ஆட்சியா....மாறி மாறிக் குற்றச்சாட்டு

டெங்கு ஆட்சியா.... எய்ட்ஸ் ஆட்சியா....மாறி மாறிக் குற்றச்சாட்டு
Published on

தமிழகத்தில் தற்போதுள்ள அரசை டெங்கு அரசு என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்திருந்த நிலையில், திமுகவின் முந்தைய ஆட்சியை எய்ட்ஸ் ஆட்சி என கைத்தறித்துறை அமைச்சர் ஒ.எஸ்.மணியன் விமர்சித்துள்ளார். 

சென்னை கொளத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், தற்போது தமிழகத்தில் அதிக அளவில் டெங்கு பரவியுள்ளது என்றார். இந்த டெங்கு காய்ச்சல் ஒழிய வேண்டுமென்றால், தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் உள்ள டெங்கு ஆட்சி ஒழிய வேண்டும் என்று அவர் விமர்சனம் செய்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.எஸ்.மணியன், "திமுக செயல் தலைவர் இப்போதுள்ள ஆட்சியை டெங்கு ஆட்சி எனக் கூறியுள்ளார் என்றால், முந்தைய திமுக ஆட்சி எய்ட்ஸ் ஆட்சி" என விமர்சித்தார்.    

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com