\
ஜெயலலிதாவின் ஆன்மாதான் இணைத்தது: ஓபிஎஸ் பேச்சு

ஜெயலலிதாவின் ஆன்மாதான் இணைத்தது: ஓபிஎஸ் பேச்சு

ஜெயலலிதாவின் ஆன்மாதான் இணைத்தது: ஓபிஎஸ் பேச்சு
Published on

ஜெயலலிதாவின் ஆன்மாதான் அதிமுக அணிகளை இணைத்ததாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவிற்கு பின் பிரிந்த அதிமுக-வின் இரு அணிகளும் இன்று மீண்டும் இணைந்தன. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலத்திற்கு வருகை புரிந்த முதலமைச்சர் பழனிசாமி மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி இணைந்தனர்.

பின்னர் பேசிய ஓபிஎஸ், " ஒரு தாய் சகோதர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்தாலும் எங்களை யாராலும் பிரிக்க முடியாது. என் மனதில் இருந்த பாரம் இன்றுடன் குறைந்துவிட்டது. ஜெயலலிதாவின் ஆன்மாதான் எங்களை இணைத்தது. தொண்டர்கள் விருப்பத்துக்கு ஏற்பவே இணைந்துள்ளோம். அதிமுகவின் சாதாரண தொண்டனாக இருந்து கட்சி வளர்ச்சிக்கு பாடுபடுவேன். அதிமுகவின் இணைப்புக்கு முழு ஒத்துழைப்பு தந்த முதலமைச்சர் பழனிசாமி, கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி" என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com