அதிமுகவிலிருந்து பிரிந்து தனி அணியாக செயல்படும் ஓ.பன்னீர்செல்வம், தங்களது பங்காளிதான் என சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த திவாகரன், “ஓபிஎஸ் உடன் எதுவும் பகை இல்லை. அவர் எங்களுக்கு பங்காளிதான். எப்போது வேண்டுமானாலும் அவர்கள் வருவார்கள். எங்களோடு இணைவார்கள். இப்போது ஒருவர் வந்திருக்கிறார். துணைப் பொதுச்செயலாளர் தினகரன் சொன்னதுபோல அனைவரையும் இணைக்கவே நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். இதில் மறைமுக செயல்திட்டம் எதுவும் இல்லை. இப்போது நடக்கும் ஆட்சி சிறப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது” என்று கூறினார்.

