நவ.7 ஆம் தேதி கமல் முக்கிய அறிவிப்பு: அரசியல் பிரவேசமா?

நவ.7 ஆம் தேதி கமல் முக்கிய அறிவிப்பு: அரசியல் பிரவேசமா?

நவ.7 ஆம் தேதி கமல் முக்கிய அறிவிப்பு: அரசியல் பிரவேசமா?
Published on

நடிகர் கமல்ஹாசனின் தீவிர அரசியல் பிரவேசம் எப்போது என கேள்வி எழுந்துள்ள சூழலில், வரும் நவம்பர் 7 ஆம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

வார இதழ் ஒன்றில் இதனை குறிப்பிட்டுள்ள கமல்ஹாசன், இளைஞர்களை ஒருங்கிணைக்க வேண்டிய கடமையும் தேவையும் தனக்கு வந்துவிட்டதாக கூறியுள்ளார். செய்வார்கள் என காத்திருந்தது போதும் என தெரிவித்துள்ள கமல்ஹாசன், நம்மால் முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். செயல் திட்டங்களை தீட்ட, இனியும் தாமதிக்காமல் கூடுவோம் என அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழகத்திற்கு செய்ய வேண்டிய கடமையாக நினைத்து வருபவர்களை இருகரம் கூப்பி வரவேற்பதாகவும், பல்வேறு இயக்கங்கள் தம்முடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு உதாரணமாக அறப்போர் இயக்கத்தை சுட்டிக்காட்டியுள்ள கமல்ஹாசன், அந்த இயக்கம் பல கோணங்களில் ஊழலை நேர்கொண்டு தாக்கும் அமைப்பு என பாராட்டியுள்ளார். எனவே, தனது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மக்களுடனும் தன்னுடனும் தொடர்புகொள்ள வசதியாக சில ஏற்பாடுகள் நடப்பதாகவும் அதுபற்றிய அறிவிப்பு வரும் நவம்பர் 7 ஆம் தேதி வெளியாகும் எனவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

பேசிக்கொண்டே இருப்பதைவிட, கேள்விகளுக்கு பதில் சொல்ல எத்தனிப்பது ஒருவிதத்தில் கொள்கை விளக்கமாக மாற வாய்ப்புண்டு என கூறியுள்ள கமல்ஹாசன், வாருங்கள் நியாயத்தூள் கிளப்புவோம் என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com