சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம்: வடமாநில வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம்: வடமாநில வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம்: வடமாநில வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
Published on

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே +2  மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி குழந்தை திருமணம் செய்து கொண்ட வடமாநில வாலிபரை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பெரிய உலகாணி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மகள், திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கால் பள்ளிகளுக்கு விடுமுறையாக இருப்பதால், விருசங்குளம் கிராமத்திலுள்ள ஃபுட் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார்.

அப்போது அதே கம்பெனியில் வேலை பார்த்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சங்கர் மகன் அமர்ஜித், மாணவியிடம் ஆசை வார்த்தி கூறி கடந்த 25ஆம் தேதி யாருக்கும் தெரியாமல் சிறுமியை திருமணம் செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த மாணவியின் தந்தை மணிகண்டன், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் புகாரின் அடிப்படையில் 18 வயது பூர்த்தி அடையாத பள்ளி மாணவியை திருமணம் செய்த காரணத்திற்காக வடமாநில வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com