டிரெண்டிங்
“கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்க வேண்டும்” - வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்ணால் கர்நாடகாவில் பரபரப்பு
கட்டணமின்றி பயணிக்க தன்னையும் அனுமதிக்க வேண்டுமென கர்நாடக அரசு பேருந்தில் வடமாநில பெண் வாக்குவாதம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண சலுகை வழங்கப்பட்டுள்ளது. எனினும் இத்திட்டத்தில் பயன்பெற அப்பெண்கள் கர்நாடகாவைச் சேர்ந்தவராகவோ அல்லது அங்கு வசிக்கும் முகவரி ஆதாரத்தைக் கொண்டவராகவோ இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக பயணத்தின்போது அடையாள ஆவணத்தைக் காட்ட வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது.

govt buspt desk
இந்நிலையில், வடமாநில பெண் ஒருவர் பெங்களூருவில் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். நடத்துனர் பயணச்சீட்டு வாங்கக் கூறியதால் அவருடன் அப்பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தான் மத்திய அரசு ஊழியர் என்றும் பெங்களூருவில் தங்கி இருப்பதாகவும் கூறி அதற்கான ஆதாரத்தை அப்பெண் காட்டியுள்ளார். எனினும் இதை நடத்துனர் ஏற்கவில்லை. இதையடுத்து அப்பெண் வாக்குவாதம் செய்துள்ளார். இது வீடியோவாக வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.