“நேரு குடும்பத்தில் அல்லாத ஒருவர் தலைவர் ஆகலாம்.. ஆனால்” - மணிசங்கர் ஐயர்

“நேரு குடும்பத்தில் அல்லாத ஒருவர் தலைவர் ஆகலாம்.. ஆனால்” - மணிசங்கர் ஐயர்
“நேரு குடும்பத்தில் அல்லாத ஒருவர் தலைவர் ஆகலாம்.. ஆனால்” - மணிசங்கர் ஐயர்

காங்கிரஸ் கட்சியில் நேரு குடும்பத்தில் அல்லாத ஒரு தலைவர் ஆவது குறித்து மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் கருத்து தெரிவித்துள்ளார். 

சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. ராகுல் காந்தி தலைமை பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் தேர்தல் என்பதால் அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், கிட்டதட்ட 2014 ஆண்டினை போல் இந்த தேர்தலிலும் எதிர்க்கட்சி அந்தஸ்து பெற முடியாத அளவிற்கு காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது.

தேர்தல் முடிவுகளுக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்ததாக தகவல் வெளியானது. ஆனால், ராகுல் காந்தியே தொடர்ந்து தலைவராக நீடிப்பார் என மூத்த தலைவர்கள் தெரிவித்து வந்தனர். ஆனால், ராகுல் காந்தி தன்னுடைய முடிவில் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன. இருப்பினும், அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பு குறித்து கட்சியின் மூத்த தலைவர் மணி சங்கர் ஐயர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நேரு குடும்பத்தில் அல்லாத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆக முடியும். ஆனால், தற்போதைக்கு நேரு குடும்பத்தில் இருந்து ஒருவர் தலைவர் ஆனால்தான் கட்சிக்குள் வலிமையாக இருக்க முடியும். 

பாஜகவின் நோக்கம் என்னவென்றால் நேரு குடும்பம் அல்லாத காங்கிரஸ் கட்சி. அதாவது காங்கிரஸ் இல்லாத பாரதத்தை அது எதிர்பார்க்கிறது. ராகுல் காந்தியே கட்சியின் தலைவராக இருப்பது சிறந்தது. அவரது சொந்த விருப்பத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். நேரு குடும்பத்தினர் தலைவராக இல்லாமல் கூட காங்கிரஸ் இருக்கும். கட்சிக்குள் பெரிய பிரச்னைகள் எழும் போது அதனை நேரு குடும்பத்தினரால்தான் சரி செய்ய முடியும்” என்று கூறினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com