\
கமல் மீது நடவடிக்கைக்கு முகாந்திரம் இல்லை: காவல் ஆய்வாளர் தகவல்

கமல் மீது நடவடிக்கைக்கு முகாந்திரம் இல்லை: காவல் ஆய்வாளர் தகவல்

கமல் மீது நடவடிக்கைக்கு முகாந்திரம் இல்லை: காவல் ஆய்வாளர் தகவல்
Published on

நிலவேம்பு விவகாரத்தில் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று காவல் ஆய்வாளர் கூறினார்.

நிலவேம்பு குடிநீர் குறித்து கருத்து தெரிவித்த விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசன் மீது குற்ற நடவடிக்கை எடுப்பதற்கான எந்தவித முகாந்திரமும் இல்லை என்று காவல் துறையின் மத்திய குற்றப் பிரிவு ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, புகார் அளித்த தேவராஜன் என்பவருக்கு அளித்துள்ள பதிலில், கணினி வழி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் இதைத் தெரிவித்துள்ளார். தேவராஜன் அளித்த மனுவின் மீது விசாரணை மேற்கொண்டதில், இதில் குற்ற நடவடிக்கை எடுப்பதற்கான எந்தவித முகாந்திரமும் இல்லை என்பதால் மனு முடித்து வைக்கப்படுகிறது என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com