\
அதிமுகவில் ஒருவருக்கு கூட திமுகவை விமர்சிக்க தகுதியில்லை: ஸ்டாலின்

அதிமுகவில் ஒருவருக்கு கூட திமுகவை விமர்சிக்க தகுதியில்லை: ஸ்டாலின்

அதிமுகவில் ஒருவருக்கு கூட திமுகவை விமர்சிக்க தகுதியில்லை: ஸ்டாலின்
Published on

அதிமுகவில் ஒருவருக்கு கூட திமுகவை விமர்சனம் செய்யும் தகுதி இல்லை என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கூறிய திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள மடலில் கட்சியின் அடிப்படை உறுப்பினராக பதிவு செய்து, கிளைக் கழகப் பொறுப்புகளில் தொடங்கி மாநில பொறுப்பு வரை உயர்வதற்கான உழைப்பும் முனைப்பும் மட்டுமே திமுக தொண்டனின் மூலதனம். 50 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் வாழ்வில் திமுகவின் அடிப்படை பொறுப்புகளிலிருந்து ஒவ்வொரு படியாக ஏறி செயல் தலைவர் என்ற நிலைக்கு வந்துள்ளேன். ஒரு இரவில் முதலமைச்சர் நாற்காலியை அடைவதோ, இன்னொரு இரவில் அதனை பறிகொடுத்துவிட்டு தர்மயுத்தம் நடத்த வேண்டியதோ திமுகவில் கிடையாது. எனவே திமுகவை நோக்கி விமர்சனம் செய்ய அதிமுகவினர் யாருக்கும் தகுதி கிடையாது என ஸ்டாலின் கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com