\
“மம்தாவை யாரும் தாக்கவில்லை” நேரில் பார்த்ததாக ஒருவர் சாட்சி!

“மம்தாவை யாரும் தாக்கவில்லை” நேரில் பார்த்ததாக ஒருவர் சாட்சி!

“மம்தாவை யாரும் தாக்கவில்லை” நேரில் பார்த்ததாக ஒருவர் சாட்சி!
Published on

மேற்கு வங்க மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பேனர்ஜி நேற்று நந்திகிராம் தொகுதியில் தேர்தல் பரப்புரையின் போது அடையாளம் தெரியாத சில மர்ம நபர்களால் தாக்கப்பட்டதாக அவரே தெரிவித்திருந்தார். தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

‘இது பாஜகவின் சதி வேலை’ என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் சொல்லி வருகின்றனர். மறுபக்கம் பாஜகவோ ‘இது அரசியல் நாடகம்’ என்கிறது. 

இந்நிலையில் மம்தாவை யாருமே தாக்கவில்லை என நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளதாக டைம்ஸ் நவ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

“மம்தா பயணித்த காரின் கதவு சாலையோரம் இருந்த தூண் ஒன்றில் மோதியாதினால் இந்த காயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. யாரும் அவரை தாக்கவில்லை” என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். 

நன்றி : TIMES NOW

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com