டிரெண்டிங்
தமிழக அரசை யாராலும் வீழ்த்த முடியாது: தம்பிதுரை நம்பிக்கை
தமிழக அரசை யாராலும் வீழ்த்த முடியாது: தம்பிதுரை நம்பிக்கை
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசை யாராலும் வீழ்த்த முடியாது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கரூரில் இன்று நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, புகைப்படக் கண்காட்சியை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், கட்சியை கவிழ்க்க முடியாமல் எதிர்க்கட்சியினர் விரக்தியில் விமர்சனங்களை முன்வைப்பதாகக் கூறினார். பின்பு அங்கு வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அமைச்சர்களும் உடனிருந்தனர்.