“ஹிந்தி விருப்பப் பாடமாக படிப்பதில் தவறில்லை” - அதிமுக எம்.எல்.ஏ

“ஹிந்தி விருப்பப் பாடமாக படிப்பதில் தவறில்லை” - அதிமுக எம்.எல்.ஏ
“ஹிந்தி விருப்பப் பாடமாக படிப்பதில் தவறில்லை” - அதிமுக எம்.எல்.ஏ

ஹிந்தியை விருப்பப் பாடமாக படிப்பதில் தவறில்லை என்று குன்னம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் அருகே அரணாரையில் நூலகத் திறப்பு விழாவில் எம்.எல்.ஏ ராமச்சந்திரன் பேசினார். அப்போது, “மும்மொழி கொள்கையை எதிர்ப்பவர்களின் குழந்தைகள் தனியார் பள்ளியில் ஹிந்தி படிக்கிறார்கள். ஹிந்தியை தடுத்தால் அரசுப் பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவர். ஹிந்தியை விருப்பப் பாடமாக படிப்பதில் தவறில்லை” என அவர் கூறியுள்ளார்.

மும்மொழி கொள்கை திட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. இருப்பினும், இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருப்பதாக தமிழக அரசு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், ஹிந்தி மொழி கற்பது குறித்து எம்.எல்.ஏ ராமச்சந்திரன் இந்தக் கருத்தினை தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com