விவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்

விவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்
விவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுடன் ஒப்பிடப்பட்ட விவிபாட் இயந்திரங்கள் அனைத்திலும் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

2019 மக்களவைத் தேர்தலில் எல்லா வாக்குச்சாவடிகளிலும் பதிவாகியுள்ள விவிபாட் வாக்குகளை எண்ண வேண்டுமென்று சில கட்சிகள் கோரிக்கை விடுத்தது. ஆனால் அது நடைமுறை சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. ஆனால் ஒவ்வொரு சட்டப்பேரவைக்கும் 5 வாக்குச் சாவடிகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் ஒப்புகைச் சீட்டு எண்ணப்படும் என்று தெரிவித்தது.

அதன்படி, 4000க்கும் மேற்பட்ட பேரவை தொகுதிகளில் தலா 5 விவிபாட் வீதம், 20ஆயிரத்துக்கும் அதிகமான விவிபேட் ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்பட்டு மின்னணு இயந்திரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவை முற்றிலும் துல்லியமாகப் பொருந்தியதாகவும், வாக்கு இயந்திர வாக்குகளுக்கும், விவிபாட் வாக்குகளுக்கும் வேறுபாடுகள் ஏதும் இல்லை என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களைவைத் தேர்தலில் 8 தொகுதிகளில் மட்டும் விவிபாட் பயன்படுத்தப்பட்டன. 2017ம் ஆண்டு கோவா சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் விவிபாட் பொருத்தப்பட்டது. இப்போது நடைபெற்ற 2019 மக்களைவைத் தேர்தலிலும் அனைத்து தொகுதிகளிலும் விவிபாட் பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com