டிரெண்டிங்
தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை; மாநில அளவில் மட்டுமே: மார்க்சிஸ்ட்
தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை; மாநில அளவில் மட்டுமே: மார்க்சிஸ்ட்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக ஐதராபாத்தில் நடந்த மாநாட்டியில் சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து வரும் சீதாராம் யெச்சூரி, ஐதராபாத்தில் நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் மாநாட்டில் மீண்டும் தேர்வு செய்யப்பட்டதன் மூலம் அப்பதவியில் தொடர்கிறார். இதேபோன்று மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், முன்னாள் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் தமிழகத்திலிருந்து மத்தியக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். முன்னதாக தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்றும் மாநில அளவில் மட்டும் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்றும் மார்க்சிஸ்ட் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

