\
பாஜகவோடு கூட்டணியும் இல்லை..ஆதரவும் இல்லை - முதலமைச்சர் பழனிசாமி

பாஜகவோடு கூட்டணியும் இல்லை..ஆதரவும் இல்லை - முதலமைச்சர் பழனிசாமி

பாஜகவோடு கூட்டணியும் இல்லை..ஆதரவும் இல்லை - முதலமைச்சர் பழனிசாமி
Published on

பாரதிய ஜனதாவோடு கூட்டணியும் இல்லை, ஆதரவும் அளிக்கவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் கட்டுப்பாட்டில் அதிமுக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்ற நிலையில், முதலமைச்சர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் பிச்சாண்டி, காவிரி விவகாரத்தில் பாரதிய ஜனதாவும், அதிமுகவும் நட்பாக உள்ளதாக குட்டிக் கதை கூறி விமர்சித்தார். 

இதற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, காவிரி விவகாரத்திற்காக நாடாளுமன்றம் முடங்கும் அளவிற்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம் என்றார். மேலும், ஆந்திர பிரச்னைக்காக மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது என்றும், காவிரி பிரச்னைக்காக இல்லை என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார். நமக்காக எந்த மாநிலமும் குரல் கொடுக்கவில்லை என்றும் கூறிய முதலமைச்சர், பாரதிய ஜனதாவோடு கூட்டணியும் இல்லை, ஆதரவும் அளிக்கவில்லை என தெளிவுபடுத்தினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com