திமுக எம்எல்ஏக்கள் மீது உரிமைக்குழு நடவடிக்கை எடுக்கவில்லை: பேரவை செயலாளர் நீதிமன்றத்தில் விளக்கம்

திமுக எம்எல்ஏக்கள் மீது உரிமைக்குழு நடவடிக்கை எடுக்கவில்லை: பேரவை செயலாளர் நீதிமன்றத்தில் விளக்கம்
திமுக எம்எல்ஏக்கள் மீது உரிமைக்குழு நடவடிக்கை எடுக்கவில்லை: பேரவை செயலாளர் நீதிமன்றத்தில் விளக்கம்

குட்கா விவகாரம் தொடர்பாக திமுக எம்எல்ஏக்கள் மீது இதுவரையில் உரிமைக்குழு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்பதற்காகத்தான் நோட்டீஸ் அனுப்பப்பட்டது எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டப்பேரவை செயலாளர் தாக்கல் செய்த பதில் மனுவில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் தமிழகத்தில் தாராளமாக விற்பனை செய்யப்படுவதாக கூறி, அந்த புகையிலை பொருட்களை சட்டசபைக்கு கொண்டு வந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் காட்டினர்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த சபாநாயகர் தனபால், தடை செய்யப்பட்ட பொருட்களை அவைக்குள் கொண்டு வந்த எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க உரிமை மீறல் குழுவுக்கு பரிந்துரை செய்தார். இதன்படி, தமிழக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 21 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் விளக்கம் அளிக்கும்படி உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க சபாநாயகரிடம், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கால அவகாசம் கேட்டனர். அதேநேரம், உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 21 பேரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதி எஸ்.துரைசாமி, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மு.க.ஸ்டாலின் உள்பட 21 எம்.எல்.ஏக்கள் மீது உரிமைக்குழு நடவடிக்கை கூடாது என்று தடை விதித்தார். 

இந்த நிலையில், குட்கா விவகாரம் தொடர்பாக, சட்டப்பேரவை செயலாளர் சார்பில் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், பேரவை விதிகளுக்கு உட்பட்டு, அவைக்குள் குட்கா எடுத்து வந்தது குறித்து விளக்கம் அளிக்கவே திமுக எம்எல்ஏக்கள் 21 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது என்றும் திமுக எம்எல்ஏக்கள் விளக்கம் அளிக்க போதிய அவகாசம் தரப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குட்கா விவகாரத்தில் உரிமைக் குழு இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பெரும்பான்மை நிரூபிக்கும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், அதில் பங்கேற்காமல் திமுகவினரை தடுக்க வேண்டும் என்பது நோக்கம் அல்ல என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com