”ஒரு துண்டு கேக் சாப்பிட்டது குத்தமா?” - CCTV காட்சியோடு கேக்குக்கு காசு வசூலித்த தம்பதி!

”ஒரு துண்டு கேக் சாப்பிட்டது குத்தமா?” - CCTV காட்சியோடு கேக்குக்கு காசு வசூலித்த தம்பதி!
”ஒரு துண்டு கேக் சாப்பிட்டது குத்தமா?” - CCTV காட்சியோடு கேக்குக்கு காசு வசூலித்த தம்பதி!

திருமண நிகழ்ச்சிகளில் நடக்கும் சலசலப்புகள், சண்டை சச்சரவுகள் குறித்த எண்ணற்ற பதிவுகள் எல்லாம் சமூக வலைதளங்களில் கொட்டிக் கிடக்கின்றன. இந்தியாவில் ரக ரகமாக நடக்கும் திருமண சடங்குகளில் பல குழப்பங்கள், குளறுபடிகள் நடப்பது போலவே மற்ற நாடுகளிலும் தொடர்ந்து நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன.

அந்த வகையில் பிரிட்டனில் கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு முன்பு நடந்த வியப்பூட்டும் சம்பவம் குறித்த பதிவு ஒன்று தற்போதும் ரெடிட் தளத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

அதன்படி, புதிதாக மணமான தம்பதி ஒருவர் தங்களது திருமண வரவேற்புக்கு வந்த விருந்தினர்கள் ஒவ்வொருவரிடமும் அவர்கள் சாப்பிட்ட ஒரு துண்டு கேக்கிற்காக 3.66 பவுண்ட் (333 ரூபாய்) கொடுக்கும்படி கேட்டிருக்கிறார்கள். ஆனால் ஒன்றுக்கும் மேற்பட்ட கேக்கை சாப்பிட்டவர்களிடமும் மீண்டும் பணத்தை வசூலித்திருக்கிறார்கள். 

அதாவது, திருமணத்துக்கு பின்பு கேக் வெட்டிய போது எவரெல்லாம் ஒன்றுக்கும் மேற்பட்ட கேக் சாப்பிட்டார்கள் என்பதை கண்டுபிடிக்க வரவேற்பு நிகழ்ச்சியின்போது பதிவான சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்திருக்கிறார்கள். அதனை வைத்து அவ்வாறு இன்னொரு ஸ்லைஸ் கேக் சாப்பிட்டவர்களை தொடர்பு கொண்டு வசூல் வேட்டையை அந்த தம்பதி நடத்தியிருக்கிறார்கள். அதுதான் வைரலான பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இது தொடர்பான வாட்ஸ்அப் சேட்டில், அந்த தம்பதி குறிப்பிட்ட அந்த பயனருக்கு சிசிடிவி காட்சியை ஆதாரமாக அனுப்பி, “நாங்கள் இப்போதுதான் சிசிடிவி காட்சியெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தோம். அதில் எல்லா விருந்தினர்களிடமும் ஒரு ஸ்லைஸ் கேக் சாப்பிட கட்டணம் கட்ட சொல்லியிருந்தோம். அதில் நீங்கள் இரண்டு ஸ்லைஸ் சாப்பிட்டுவிட்டு ஒரு ஸ்லைஸுக்கு மட்டுமே பணம் கொடுத்திருக்கிறார்கள். ஆகவே 3.66 பவுண்டை உடனடியாக அனுப்புங்கள்” என கேட்டிருக்கிறார்கள்.

இந்த உரையாடல் குறித்த ஸ்கீரீன்ஷாட்டை கண்ட நெட்டிசன்கள் பலரும் அந்த தம்பதியின் செயலை எண்ணி முகம் சுழிப்பாக பதிவிட்டிருக்கிறார்கள். அதில், “நானாக இருந்தால், அந்த கட்டணத்தை என்னுடைய பரிசுக்கான தொகையாக எண்ணிக்கொள்ளுங்கள். அது எவ்வளவாக இருந்தாலும் பரவாயில்லை.” எனக் கூறியிருப்பேன் என ஒரு பயனர் பதிவிட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com