\
விரைவில் அதிமுகவுக்கு டிவி, செய்தித்தாள்: முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

விரைவில் அதிமுகவுக்கு டிவி, செய்தித்தாள்: முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

விரைவில் அதிமுகவுக்கு டிவி, செய்தித்தாள்: முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
Published on

அதிமுகவுக்கு பிரத்யேகமாக புதிய தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள் தொடங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பரபரப்பான சூழலில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைபாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் காலை 10 மணி அளவில் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டிருந்த நிலையில் 100க்கும் அதிகமான எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் எம்எல்ஏக்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, அதிமுகவுக்கு என்று பிரத்யேகமாக புதிய தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள் விரைவில் தொடங்கப்படும் என தெரிவித்தார். இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் முதலமைச்சர் கூறினார். அதிமுகவிற்காக பிரத்யேகமாக இருந்த தொலைக்காட்சி தற்போது டிடிவி தினகரனுக்கு ஆதரவாக உள்ள நிலையில் அதிமுகவுக்கு என பிரத்யேகமாக தொலைக்காட்சி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com