புதிய நாடாளுமன்றம் கட்டும் ஒப்பந்தம்: ஏலத்தில் வென்ற டாடா நிறுவனம்!
புதிய நாடாளுமன்றம் கட்டும் ஒப்பந்தத்தை டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனம் 861.90 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் மக்கள் தொகைக்கு ஏற்பவும் எம்.பி.க்களுக்கு வசதியாக இருக்கவும் புதிய நாடாளுமன்றம் கட்டுவோம் என்றார்கள். அதற்கான, பணிகளும் தொடர்ச்சியாக நடந்து வந்தன.
இந்நிலையில், புதிய நாடாளுமன்றம் கட்டும் ஒப்பந்தத்தை இன்று மத்திய பொதுப்பணித்துறை ஏலத்தில் விட்டது. பல்வேறு நிறுவனங்கள் கலந்துகொண்ட, இந்த ஏலத்தில் டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனம் வென்றுள்ளது. இந்தப் புதிய நாடாளுமன்றம் தற்போதைய நாடாளுமன்றத்தின் அருகிலேயே கட்டப்படவுள்ளது.
நாடாளுமன்ற மாளிகைத் தோட்டத்தின் 188 வது இடத்தில் முக்கோண வடிவம் கொண்ட இந்தப் புதியக் கட்டடம் வரும் என்று பொதுப்பணித்துறையும் அறிவித்துள்ளது. 21 மாதங்களில் முழுப் பணியும் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.