‘புதிய சிபிஐ இயக்குநர் அனுபவமில்லாதவர்’ மல்லிகார்ஜுன் கார்க்கே அதிருப்தி

‘புதிய சிபிஐ இயக்குநர் அனுபவமில்லாதவர்’ மல்லிகார்ஜுன் கார்க்கே அதிருப்தி
‘புதிய சிபிஐ இயக்குநர் அனுபவமில்லாதவர்’ மல்லிகார்ஜுன் கார்க்கே அதிருப்தி

சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள ரிஷிகுமார் சுக்லா, மற்றவர்களை காட்டிலும் அனுபவம் குறைவானவர் என்று மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்க்கே கூறியுள்ளார்.

 சி.பி.ஐ. இயக்குனராக இருந்த அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் மோதல் ஏற்பட்ட நிலையில், இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார். ஆனால், அவரது நியமனத்தை எதிர்த்தும் வழக்குத் தொடரப்பட்டது. இதனையடுத்து சிபிஐக்கு புதிய இயக்குநரை நியமிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டது. 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், புதிய இயக்குநரை நியமிப்பது தொடர்பாக நேற்று இரண்டாவது கூட்டம் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மல்லிகார்ஜுன கார்க்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால், இந்தக் கூட்டத்திலும் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. ஆனால், சிபிஐக்கு புதிய நீதிபதியை நியமிப்பதில் ஏன் இவ்வளவு தாமதம் என்று உச்சநீதிமன்றம் நேற்று கேள்வி எழுப்பியது.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ரிஷி குமார் சுக்லா இன்று சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு 2021 வரை இவர் இயக்குநராக நீடிப்பார். 

இதனிடையே, ரிஷிகுமார் சுக்லா சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டதற்கு மல்லிகார்ஜுன கார்க்கே அதிருப்தி தெரிவித்துள்ளார். ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரணை செய்ததில் சுக்லா போதிய அனுபவம் இல்லாதவர் என்று கார்க்கே கூறியுள்ளார்.

ஊழல் வழக்குகளில் 100 மாதங்களுக்கு மேல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்ற விதி உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், மூவர் குழுவில் இடம்பெற்றுள்ளத பிரதமர் மோடி, தலைமை நீதிபதி ரஞ்சய் கோகாய் விதிகளை நீர்த்துப் போக செய்துவிட்டனர் என்று கார்க்கே தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com