”இது நம்ம ஊருக்கு செட்டாகாது சார்” -ஆனந்த் மஹிந்திரா ட்வீட்டுக்கு நெட்டிசன்ஸ் அதிருப்தி!

”இது நம்ம ஊருக்கு செட்டாகாது சார்” -ஆனந்த் மஹிந்திரா ட்வீட்டுக்கு நெட்டிசன்ஸ் அதிருப்தி!
”இது நம்ம ஊருக்கு செட்டாகாது சார்” -ஆனந்த் மஹிந்திரா ட்வீட்டுக்கு நெட்டிசன்ஸ் அதிருப்தி!

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். வைரல் வீடியோக்களை பகிர்ந்து, பலரது இவ்வுலகுக்கு பரிட்சியப்படுத்துவதோடு, அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருவதில் அவர் என்றும் தவறியதில்லை.

இதனால் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டரில் என்ன ஷேர் செய்துள்ளார் என்பதை காணவே ஒரு கூட்டம் இருக்கின்றன. மேலும் அவை தொடர்பான விவாதங்களும் சமூக வலைதளங்களில் எழுவது தொடர் கதையாகியுள்ளது.

அவ்வகையில், கடந்த ஆகஸ்ட் 3ம் தேதியன்று, அமெரிக்கன் ரோடு பேட்ச் என்ற அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்தின் கண்டுபிடிப்பு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை ஒரு பிசினால் உருவாக்கப்பட்ட ஷீட் போன்று உள்ள தார்ப்பட்டையை பொறுத்துகிறார்கள். இதனை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா இந்த தயாரிப்பு இந்தியாவிற்கு அவசியமானதாக இருக்கும் எனக் கூறியுள்ளார். இதனைக் கண்ட இணையத்தினர் அவரது கருத்துடன் உடன்படாமல் இருந்திருக்கிறார்கள்.

அதில், 2 நிமிட கிளிப்பில், தொழிலாளர்கள் பிசின் பேட்ச் மூலம் குழிகளை மூடுவதைக் காணலாம். வீடியோவின் படி, இது உயர்தர asphalt, பாலிமர் மற்றும் ஜியோ-செயற்கை கண்ணாடியிழை ஆகியவற்றின் கலவையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. "சாலைகளில் பயன்படுத்தும்போது, குழிகள் மற்றும் விரிசல்களை மறைக்க இது ஒரு நீர்ப்புகா முத்திரையை உருவாக்குகிறது" என்று வீடியோவில் உள்ள கேப்ஷன் மூலம் அறியலாம்.

"இது இந்தியாவிற்கு அவசியமான ஒரு கண்டுபிடிப்பு என்று நான் கூறுவேன். சில கட்டிடம்/கட்டுமானப் பொருட்கள் நிறுவனம் இதைப் பின்பற்ற வேண்டும் அல்லது இந்த நிறுவனத்துடன் ஒத்துழைக்க வேண்டும் மற்றும் அதை இங்கே முன்னோக்கி கொண்டு வர வேண்டும்” என ஆனந்த் மஹிந்திரா அந்த வீடியோவை பகிர்ந்து தனது கருத்தை கூறியுள்ளார்.

சுமார் ஏழு லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வீடியோவை கண்டிருக்கிறார். அதில் பெரும்பாலானோர் ஆனந்த் மஹிந்திராவின் கருத்தை ஏற்கவில்லை. ஏனெனில் ஸ்டிக்கர் அமைப்பிலான சாலையை மூடும் இந்த கண்டுபிடிப்பு தற்காலிகமானது என்று பலரும் பதிவிட்டிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com