தனி அறை, கழிப்பறை இருந்தால் மட்டுமே வீட்டில் தனிமைப்படுத்துதல் – நெல்லை கலெக்டர் உத்தரவு!

தனி அறை, கழிப்பறை இருந்தால் மட்டுமே வீட்டில் தனிமைப்படுத்துதல் – நெல்லை கலெக்டர் உத்தரவு!
தனி அறை, கழிப்பறை இருந்தால் மட்டுமே வீட்டில் தனிமைப்படுத்துதல் – நெல்லை கலெக்டர் உத்தரவு!

நெல்லை மாவட்டத்தில் தற்போது 1,458 பேரும், தென்காசி மாவட்டத்தில் 760 பேரும் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது.

அப்போது அவர் பேசும்போது, ''நோய்த் தொற்று பாதிப்பு இடங்களை கண்டறிந்து அதிக அளவில் மருத்துவ பரிசோதனை முகாம்களை நடத்த வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் அறிகுறிகள் காணப்படும் நபர்களை உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும். கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும்.

களப்பணியாளர்கள், அங்கன்வாடி மற்றும் கிராமப்புற செவிலியர்களை அதிக அளவில் பயன்படுத்தி வீடு, வீடாக சென்று குடும்ப உறுப்பினர்களில் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு, இதய நோய் சம்பந்தப்பட்ட நபர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் 5 வயதுக்கு உட்பட்டோர் விவரங்களை சேகரித்து மருத்துவ அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய மருத்துவ முகாம்களில் சத்து மாத்திரைகள், கபசுரக் குடிநீர், சளி இருமல், காய்ச்சலுக்கான மருந்து மாத்திரைகள் கையிருப்பு வைத்திருக்க வேண்டும். அனைத்து பகுதிகளிலும் சுகாதார நடவடிக்கைகள், கிருமி நாசினி தெளித்தல் போன்ற பணிகளை உள்ளாட்சி துறை மூலம் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.

வீட்டில் தனிமைப்படுத்துதலை கோருகிறவர்களுக்கு சம்பந்தப்பட்ட வீட்டில் அவர்களுக்கென தனி அறை மற்றும் கழிப்பறை வசதி இருந்தால் மட்டுமே வீட்டு தனிமைப்படுத்துதலுக்கு அனுமதிக்க வேண்டும். இதை சுகாதார அதிகாரிகள், மருத்துவ அதிகாரிகள் சரியாக கையாள வேண்டும்’’ என்று அவர் அறிவுறுத்தினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com