"தாமரைக்கு வாக்களித்தால் மத்திய, மாநில அரசின் திட்டங்கள் வீடுதேடி வரும்" - நமீதா பேச்சு

"தாமரைக்கு வாக்களித்தால் மத்திய, மாநில அரசின் திட்டங்கள் வீடுதேடி வரும்" - நமீதா பேச்சு

"தாமரைக்கு வாக்களித்தால் மத்திய, மாநில அரசின் திட்டங்கள் வீடுதேடி வரும்" - நமீதா பேச்சு
Published on

தாமரைக்கு வாக்களித்தால் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் வீடு தேடிவரும் என நெல்லையில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும் நடிகையுமான நமீதா பரப்புரையில் தெரிவித்தார்.

திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும் நடிகையுமான நமீதா திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட டவுண், பேட்டை, சுத்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் நின்றவாறு தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், "திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். இவர் கடந்த முறை வெற்றி பெற்று பல்வேறு நலத்திட்டங்கள் திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதிக்கு கொண்டு வந்துள்ளார். தாமரைக்கு வாக்களித்தால் வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் வழங்கப்படும். பெண்களுக்கு 1500 ரூபாய் வழங்கப்படும் என்றவர் தொடர்ந்து.

தாமரைக்கு வாக்களித்தால் மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் வீடு தேடிவரும். வீடு இல்லாதவர்களுக்கு இடம் கொடுத்து இலவசமாக வீடு கட்டிக் கொடுக்கப்படும். கையால் துணி துவைத்து கஷ்டப்பட வேண்டாம் இலவச வாஷிங்மெஷின் கொடுக்கப்படும். அதேபோல வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலை தரப்படும்" என்று பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com