\
நெல்லை: வேட்பாளர் முன்பு கட்டிப்புரண்டு சண்டையிட்ட அதிமுக தொண்டர்கள்

நெல்லை: வேட்பாளர் முன்பு கட்டிப்புரண்டு சண்டையிட்ட அதிமுக தொண்டர்கள்

நெல்லை: வேட்பாளர் முன்பு கட்டிப்புரண்டு சண்டையிட்ட அதிமுக தொண்டர்கள்
Published on

வள்ளியூரில் வேட்பாளரிடம் கோரிக்கை வைக்க சென்றவருக்கும் மற்றொரு தொண்டருக்கும் இடையே கைலப்பு ஏற்பட்டது. 

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் நேற்று இரவு அதிமுக வேட்பாளர் இன்பதுரை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த வேட்பாளரிடம் இராதாபுரத்தை சேர்ந்த ஒருவர் கோரிக்கை வைக்க முற்பட்டார். அவரை மற்றொருவர் இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு கோரிக்கை வைக்க முயன்றவரின் வீட்டு சுவற்றில், இழுத்துச் சென்றவர் அனுமதி பெறாமல் சுவர் விளம்பரம் செய்ததாக கூறப்படுகிறது. இது வாய்தகராறாக இருந்த நிலையில், கைகலப்பாக மாறி இருவரும் கட்டிப் புரண்டு சண்டை போட ஆரம்பித்தனர்.

இதனால் அங்கு கூட்டம் கூடியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வள்ளியூர் போலீசார் இருவரையும் பிரித்து சண்டையை விலக்கி அனுப்பிவைத்தனர். இதை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

ஒரே கட்சியை சேர்ந்த எதிர் எதிர் வீட்டு தொண்டர்கள் கட்டிப்புரண்டு சண்டை போட்டது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com