\
நெல்லை தீக்குளிப்பு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

நெல்லை தீக்குளிப்பு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

நெல்லை தீக்குளிப்பு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
Published on

நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் இசக்கிமுத்து குடும்பம் தீக்குளித்து இறந்த வழக்கில், தலைமைச் செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

நெல்லை தீக்குளிப்பு சம்பவத்தில் மனு அளித்த பின்னும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி செந்தில் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து டிசம்பர் 6-ம் தேதிக்குள் தலைமைச் செயலாளர், தென்மண்டல ஐ.ஜி. பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com