நீட் விவகாரத்தில் மத்திய அரசு ஆணவப் போக்கு: வைகோ

நீட் விவகாரத்தில் மத்திய அரசு ஆணவப் போக்கு: வைகோ

நீட் விவகாரத்தில் மத்திய அரசு ஆணவப் போக்கு: வைகோ
Published on

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்த கருத்து மத்திய அரசின் ஆணவப் போக்கை காட்டுகிறது என  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். 

இது குறித்துப் பேசிய அவர், தமிழகத்தில் இருந்து நீட்தேர்வுக்காக அனுப்பப்பட்ட கோரிக்கை எங்கே இருக்கிறது என அந்த அமைச்சர் கேட்கிறார். இதைவிட ஏளனம் செய்கிற, பரிகாசம், செய்கிற, அகந்தையோடும், ஆணவத்தோடும் சொல்கிற பதில் வேறு ஒன்றும் இருக்க முடியாது. ஏழரைக்கோடி மக்களின் சார்பாக, சட்டமன்றத்தின் சார்பாக செல்லப்பட்ட கோரிக்கையை நிராகரித்து நாங்கள் நடத்தியே தீர்வோம் என்கிறார்கள். இதனால் பாதிக்கப்டுவது தமிழக மாணவர்கள் அல்லவா? சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 2 அல்லது 3 சதவிகிதம் படித்த மாணவர்கள் அதிக இடங்களைப்பெறுவது என்பது எங்களது உரிமையை பறிக்கும் செயல். நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக கட்சிகள் பேதங்களை‌ மறந்து இணைந்து செயல்பட வேண்டியுள்ளது’ என தெரிவித்துள்ளார்.  
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com