நீட் மசோதா: மத்திய அரசு மீது விஜயபாஸ்கர் புகார்
நீட் தேர்வு தொடர்பான தமிழக அரசின் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு அனுப்பவில்லை என அமைச்சர் விஜய பாஸ்கர் புகார் தெரிவித்தார்.
தமிழக சட்டபேரவையில் நீட் தேர்வு தொடர்பான விவகாரம் இன்று எதிரொலித்தது. அப்போது எம்எல்ஏ தங்கம் தென்னரசுவின் கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், நீட் தேர்வு தொடர்பான தமிழக அரசின் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு அனுப்பவில்லை என பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் நீட் தேர்வில் கிராமப்புற மாணவர்களை பாதுகாக்க உள்ஒதுக்கீடு முறை கொண்டுவருவது தொடர்பாக ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன் மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு பெறும் மசோதா, தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இன்றுவரை இந்த மசோதாவை மத்திய அரசு குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை.

