தொங்கு நாடாளுமன்றம்தான் அமையும் - யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது

தொங்கு நாடாளுமன்றம்தான் அமையும் - யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது
தொங்கு நாடாளுமன்றம்தான் அமையும் - யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது

தற்போதைய நிலையில் மக்களவை தேர்தல் நடந்தால், தொங்கு நாடாளுமன்றம் அமைய வாய்ப்புள்ளதாக ஏபிபி-சிவோட்டர் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு கூறுகின்றது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பற்றிய பல்வேறு கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. இந்தியா டுடே வெளியிட்ட கருத்துக் கணிப்பில் மம்தா, அகிலேஷ், மாயாவதி உள்ளிட்டோருடன் இணைந்து போட்டியிட்டால் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்நிலையில், ஏபிபி-சிவோட்டர் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் பாஜக தனிப் பெரும் கட்சியாக வெற்றி பெறும் என்றும், ஆனால் ஆட்சி அமைக்க போதுமான பெரும்பான்மை கிடைக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் மக்களவை தேர்தல் நடந்தால் பாஜக கூட்டணி 233 இடங்களும் காங்கிரஸ் கூட்டணி 167 இடங்களும் மற்றவை 143 இடங்களும் வெல்ல வாய்ப்புள்ளதாக அந்தக் கருத்துக் கணிப்பு தெரிவிக்கின்றது. தொங்கு நாடாளுமன்றம் அமைய வாய்ப்புள்ளது.  

உத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் மாயாவதி-அகிலேஷ் கூட்டணி 51 இடங்களை வெல்ல வாய்ப்புள்ளது. அதேபோல், பாஜகவுக்கு 25 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆட்சி அமைப்பதில் மாநிலக் கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கும்.

கருத்துக் கணிப்பின் சில முக்கிய தகவல்கள்:-

  • மகாராஷ்ட்ராவில் 48 இடங்களில் காங்கிரஸ் 28 இடங்களும் பாஜக 20 இடங்களும் வெல்ல வாய்ப்பு.
  • பீகாரில் உள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் 5 இடங்களும் பாஜக 35 
  • இடங்களிலும் வெல்ல வாய்ப்பு
  • மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் 34 இடங்களிலும் பாஜக 7 இடங்களிலும் வெல்ல வாய்ப்பு 
  • மத்திய பிரதேசத்தில் உள்ள  29 தொகுதிகளில் பாஜக 23 இடங்கள், 
  • காங்கிரஸ் 6 இடங்கள் வெல்ல வாய்ப்பு
  • பஞ்சாப்பில் உள்ள  13 தொகுதிகளில் காங்கிரஸ் 12 இடங்களிலும் பாஜக 1 இடத்திலும் வெல்ல வாய்ப்பு 
  • ஹரியானாவில் உள்ள  10 தொகுதிகளில் பாஜக 7 இடங்களிலும் காங்கிரஸ் 3 இடங்களிலும் வெல்ல வாய்ப்பு
  • ஒடிசாவில் உள்ள 21 தொகுதிகளில் பிஜு ஜனதா தளம் 9 இடங்களும் பாஜக 12 இடங்களும் வெல்ல வாய்ப்பு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com