”பாஜக மீது அதிருப்தி இருந்தது உண்மை தான்” - நயினார் நாகேந்திரன்

”பாஜக மீது அதிருப்தி இருந்தது உண்மை தான்” - நயினார் நாகேந்திரன்

”பாஜக மீது அதிருப்தி இருந்தது உண்மை தான்” - நயினார் நாகேந்திரன்
Published on

பாஜக மீது அதிருப்தி இருந்தது உண்மை தான். அதனால் தென்மண்டல பொறுப்பாளர் பதவி கொடுக்கவில்லை என பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் தென்மண்டல பொறுப்பாளராக பதவியேற்ற பின்பு நெல்லை வந்த அவருக்கு நெல்லை மாவட்ட பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளிடம் பேசிய அவர், “தமிழக பாஜகவில் ஆளுமை மிக்க தலைவர் இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ என்ன அர்த்தத்தில் சொன்னார் என்று தெரியவில்லை. பதவி, திறமை, உழைப்பை வைத்து தான் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆளுமை உருவாகும். மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் நிறைய பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வருவார்கள். அவர்கள் ஆளுமை மிக்க தலைவர்களாக நாட்டை ஆள்வார்கள்.

தேர்தலை பற்றி யாரும் சிந்திக்கவில்லை. தேர்தல் தேதி அறிவித்த பிறகுதான் யார் யார் கூட்டணியில் இருப்பார்கள் எனத் தெரியும். எல்லாம் நம்பிக்கை தான். பாஜக நாளை ஆட்சிக்கு வரும் என்பது போல தமிழகத்தில் ஒரு சூழல் உள்ளது. அதை பயன்படுத்தி ஆட்சிக்கு வர முயற்சி செய்கிறோம். கூட்டணி குறித்து அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும்” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், ”பாஜக எப்போதும் கிங் தான், பாஜக மீது அதிருப்தி இருந்தது உண்மைதான். அதனால் பதவி கொடுக்கவில்லை. அதிருப்தி இருந்ததால் பதவி கொடுத்தார்கள் என்றால் எனக்கு மாநில பொதுச்செயலாளர் பதவி கொடுத்திருக்க வேண்டும். வருத்தம் வருத்தம் தான். தற்போது மண்டலங்கள் பிரிக்கப்பட்டுள்ளதால் இந்த பதவி கொடுத்துள்ளனர்” எனக் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com