”உயிரும் நீயே.. உலகமும் நீயே..” - மகன்களின் பெயரை அறிவித்த நயன் - விக்கி தம்பதி!

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தங்களது இரு மகன்களின் பெயர்களை அறிவித்திருக்கிறார்கள்.
VigneshShivN , Nayanthara
VigneshShivN , NayantharaTwitter

கோலிவுட்டின் நட்சத்திர தம்பதியாக இருக்கக் கூடிய நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தங்களது இரு மகன்களின் பெயர்களை பொதுவெளியில் அறிவித்திருக்கிறார்கள்.

தனியார் விருது விழாவில் பங்கேற்றிருந்த போது நடிகை நயன்தாரா தனது மகன்களின் பெயர்களை வெளிப்படையாக அறிவித்தார். அதன்படி உயிர் ருத்ரோநீல் .என்.சிவன் மற்றும் உலக் தெய்விக்.என்.சிவன் என பெயரிட்டிருப்பதாக கூறினார்.

இது தொடர்பாக சில நொடிகள் கொண்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலான நிலையில், நயன் விக்னேஷ் மகன்களின் பெயர் சரியாக புரியவில்லை என்று பலரும் பதிவிட்டிருந்தார்கள்.

இந்த நிலையில், இயக்குநரும் நயன்தாரா கணவருமான விக்னேஷ் சிவன் மகன்களுடன் இருக்கும் ஃபோட்டோக்களை பகிர்ந்து ட்விட்டரிலேயே அதிகாரப்பூர்வமாக பெயர்களை தெளிவுபட குறிப்பிட்டிருக்கிறார்.

அதன்படி, “அன்புக்குரிய நண்பர்களே, உயிர் ருத்ரோநீல் N சிவன் , உலக் தெய்விக் N சிவன் என எங்கள் மகன்களுக்கு பெயர் வைத்திருக்கிறோம். பெயரில் N என இருப்பது அவர்களின் சிறந்த அம்மாவான நயன்தாராவை குறிக்கும். ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறோம்.” என விக்னேஷ் சிவன் பதிவிட்டிருக்கிறார்.

சுருக்கமாக எங்களின் உயிரும், உலகமும் அவர்கள் மகன்கள்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக இந்த பெயரை நயன் - விக்னேஷ் தம்பதி இட்டிருக்கிறார்கள். sun set ஆகும் view point-ல் ஜன்னலோரம் இருக்கும் நயன் - விக்னேஷ் மற்றும் அவர்கள் மகன்களின் ஃபோட்டோக்கள் தற்போது எல்லா சமூக வலைதளங்களிலும் பரவி ஹிட்டடித்து வருகிறது.

முன்னதாக கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணமான நிலையில், அடுத்த சில மாதங்களிலேயே வாடகைத்தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தை பிறந்ததாக விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் அறிவித்தனர். அது அப்போது சர்ச்சையான நிலையில், 5 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் செய்துவிட்டதாக தன்னிலை விளக்கமும் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VigneshShivN , Nayanthara
”லீவ் விட்டாச்சு.. காதலிக்க தொடங்குங்க..” - வசந்த காலத்தை அனுபவிக்க இளசுகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சீனா!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com