நவோதயா பள்ளிகளால் அரசு பள்ளிகள் செயல் இழக்கும்: வேல்முருகன்

நவோதயா பள்ளிகளால் அரசு பள்ளிகள் செயல் இழக்கும்: வேல்முருகன்

நவோதயா பள்ளிகளால் அரசு பள்ளிகள் செயல் இழக்கும்: வேல்முருகன்
Published on

நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் மத்திய அரசு கொண்டுவந்தால் அரசு பள்ளிகள் செயல் இழக்கும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

சிதம்பரத்தில் இதுகுறித்து பேசிய வேல்முருகன், “சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியை தமிழக அரசு ஏற்று நடத்தும் நிலையில் ஏழை மக்களுக்கு இலவச மருத்துவம் மற்றும் மருத்துவ மாணவர்களுக்கு கல்வி கட்டணம் தனியாருக்கு நிகராக வசூலிக்காமல் அரசு மருத்துவ கல்லூரி நிர்ணயம் செய்த கட்டணத்தில் மருத்துவ கல்வி வழங்க வேண்டும்” என்றார்.

மேலும், “நீட் தேர்வு தலித், சிறுபான்மையினர் போன்ற ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ லட்சிய கனவை பாழாக்குகின்ற மோசகரமான திட்டம். எனவே மத்திய அரசு நீட் தேர்வு திட்டத்தை கைவிட வேண்டும். அதற்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்வளவு போராட்டங்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் மதிப்பளிக்கவில்லை என்று சொன்னால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும். நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் மத்திய அரசு கொண்டுவந்தால் அரசு பள்ளிகள் செயல் இழக்கும், அரசு பள்ளிகள் படிப்படியாக மூடுவதற்கான அபாயம் இருக்கிறது. எனவே இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்” என்று வேல்முருகன் பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com