டிரெண்டிங்
தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக குமரியை அறிவிக்க வேண்டும்: அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன்
தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக குமரியை அறிவிக்க வேண்டும்: அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன்
ஒகி புயலை தேசிய பேரிடராக அறிவிப்பதுடன் போதிய நிதியுதவிகளையும் மத்திய அரசு அளிக்க வேண்டும் என மாநிலங்களவையில் அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழலில் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் பேசிய அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன்,
ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப தமிழக அரசு உதவிகள் செய்துவருவதாகவும் தெரிவித்தர்.
மேலும், அந்த மாவட்டத்தை தேசிய பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவித்து புனரமைப்பு பணிகளுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்றும், தமிழகத்திற்கு தேவைப்படும் நிதியை மத்திய அரசு உடனடியாக அளிக்க வேண்டும் என்றும் நவநீதகிருஷ்ணன் வலியுறுத்தினார்.